• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!

ByKalamegam Viswanathan

Feb 6, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு வாழை கிழங்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கலைஞரின் ஒருங்கிணைந்த தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் இருந்து நாட்டு வாழைக்கிழங்குகள் கொண்டுவரப்பட்டன. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 33 விவசாயிகளுக்கு ரூ. 3.25 லட்சம் மதிப்பீட்டில் நூறு சதவீதம் மானியத்துடன் இவை வழங்கப்பட் டுள்ளன. ராஜபாளையம் தோட்டக் கலை துறை அலுவலகம் முன்பு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் முத்துலட்சுமி, உதவி தோட்டக்கலை துறை அலுவலர்கள் பாலமுருகன், கார்த்திக், ஜெயக்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினார்கள். இவை தென்னையில் ஊடுபயிராக பயிரிடும்போது தென்னைக்கு தண்ணீர் பாய்ச்சுவது வாழைக்கன்றுகளுக்கும் ஏதுவாக இருக்கும் என கருதி இந்த முழு முயற்சியில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஈடுபட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.