• Tue. Apr 23rd, 2024

மதுரை சித்திரை திருவிழாவின் வரலாற்றை சொல்லும் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

May 20, 2022

உலகபுகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மிக பழமையான வரலாற்று நிகழ்வு என்பது அனைவரும் அறிந்ததே.திருவிழாவின் வரலாற்றை மெய்பிக்கும்விதமாக கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல் ஒன்று இருப்பதாக வேலூரைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம் தாமரைக்கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று மேற்பரப்பு ஆய்வு செய்தனர்.
இதை பற்றி இவர்கள் கூரியதாவது இந்த கல் மூன்று அடி உயரமும் 11/4 அடி அகலமும் உள்ளது. அக்கல்லில் அழகர் திரு அனல் ஆட்டம் வளூர் என்று நான்கு வரி மட்டும் எழுதப்பட்டுள்ளது நான்கு புறமும் சக்கரம் கோட்டோவியமாக இடம்பெற்றுள்ளது தற்பொழுது வேலூர் என அழைக்கப்படும் இவ்வூர் முன்பு வளூர் என அழைக்கப்பட்டு வந்திருக்கலாம் என தெரிகிறது.
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலத்தில் சைவ மதத்திற்கும் வைணவ மதத்திற்கும் இருந்த பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக , இரு மதங்களும் ஒற்றுமையாக கொண்டாட உருவாக்கப்பட்ட திருவிழா தான் சித்திரை திருவிழா . இந்த சித்திரை திருவிழா நிகழ்வாக சொக்கர் மீனாட்சி திருக்கல்யாணம் அழகர் ஆற்றில் இறங்குதல் போன்ற நிகழ்வில் சைவ வைணவ இணைப்பு திருவிழாவாக திருமலை நாயக்கர் நடைமுறைப்படுத்தி , இத்திருவிழா 15 நாட்கள் வரை நடைபெரும் விதமாக ஆனையிட்டு விழாவினை நடத்தி வந்துள்ளார் . இவ்வாறு நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்கு திரி எடுத்தல் அதாவது திரு அனல் ஆட்டம்
என்று சொல்லக்கூடிய நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மற்ற தென் மாவட்டங்களில் இருந்தும் இந்த திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய திரி எடுத்து ஆடி சித்திரை திருவிழாவிற்கு வருவதும் வழக்கமாக இருந்துள்ளதை மெய்பிக்கும் வகையில் இந்த வேலூர் கல்வெட்டு அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதை காளி என்று வழிபட்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *