மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு
.’சதர்ன் ரயில்வே எம்ப்ளாயீஸ் சங்கம்’ எனப்படும், எஸ்.ஆர்.இ.எஸ்., நிர்வாகிகள் நாகேந்திரன், கணேசன்.டிராக் மேன்களாக பணியாற்றும் இவர்களுக்கு, பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இதற்கு ‘சீனியாரிட்டி அடிப்படையில் பணிமாறுதல் வழங்க வேண்டும்’ என, எஸ்.ஆர்.எம்.யூ., சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக, ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரண்டு சங்கங்களின் நிர்வாகிகளும் நேற்று அடிதடியில் ஈடுபட்டனர்; சிலருக்கு காயம் ஏற்பட்டது. மோதல் குறித்து விசாரணை நடத்த, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.