• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஊனத்தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம்..,

Byமுகமதி

Feb 16, 2026

புதுக்கோட்டை துணை இயக்குனர் மருத்துவ பணிகள் தொழுநோய் அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி கிளப் இணைந்து தொழுநோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக ஊனத்தடுப்பு மற்றும் மறுவாழ்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு. மருத்துவத்துறை துணை இயக்குனர் மருத்துவ பணிகள் மரு.மு.சிவகாமி தலைமை வகித்து தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துகள் வழங்கினார்.
மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் ஸ்ரீப்ரியா தேன்மொழி மருத்துவப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

விழாவில் சென்ட்ரல் ரோட்டரி கிளப் சங்கத்தலைவர் எஸ். சரவணன், செயலாளர் எல். மருதுபாண்டியன், பொருளாளர் டி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.கருணாகரன், எம்.பார்த்திபன் உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்வில் மாவட்ட அளவில் மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள்செந்தில்நாதன், ராமநாதன், ராஜேந்திரன், மோசஸ், கீதா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன், ஸ்வாமிநாதன், திருநாவுக்கரசு, கார்த்தி, வினோத், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
நிறைவில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் எஸ்.சித்தையா நன்றி கூறினார்.