• Sun. Dec 1st, 2024

அகிலேஷ் யாதவின் பரபரப்பு அறிக்கை – அதிர்ச்சியில் உ.பி மக்கள்

Byமதி

Nov 1, 2021

2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தான் எந்த தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போது அசம்கர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், ஆளும் பாஜக மீது தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுத்து மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார் அகிலேஷ் யாதவ்

வருகிற சட்டசபை தேர்தலுக்கு முன், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க, முனைப்பு காட்டி வரும் நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹர்தோய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் உத்திரபிரதேசம் மீண்டும் செழிப்படையும். வரும் சட்டசபைத் தேர்தலில் எந்த தொகுதியிலும் நான் போட்டியிடப் போவதில்லை. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி, முந்தைய சமாஜ்வாதி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மறுபெயரிட்டு கொள்கிறது.

ராஷ்டிரிய லோக் தளத்துடனான எங்கள் கூட்டணி இறுதியானது. தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்பட உள்ளது என கூறினார்.

சட்டசபைத் தேர்தலில் எந்த தொகுதியிலும் நான் போட்டியிடப் போவதில்லை என அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *