• Fri. Apr 19th, 2024

மக்களின் தேவை அறிந்து செயலாற்றியது அதிமுக.. திண்டுக்கல் திருமண விழாவில் எடப்பாடி உரை…

Byp Kumar

Sep 7, 2022

தமிழகம் போதை மாநிலமாக திகழ்கிறது, திறமையற்றவர்கள் ஆட்சி செய்யக்கூடிய இந்த நாட்டில் மக்களின் தேவை அறிந்து செயலாற்றியது அதிமுக. ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் அவர்களின் மகள் சத்தியசீலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டார். முன்னதாக திண்டுக்கல் மாவட்ட எல்லையான அப்பியம்பட்டி நால்ரோடு பகுதியில் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆன முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருமண விழாவில் கலந்து கொண்ட பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்.தொடர்ந்து விழா மேடையில் பேசுகையில், அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தான் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம், மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து நிறைவேற்றினோம். இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். தற்போது தமிழக முழுவதும் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்கும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த மணவிழாவில் கலந்துகொண்டு இந்த மணமக்களை வாழ்த்தியதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

மேலும் நல்லதொரு தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்ததும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். கூடிய விரைவில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி அதிமுக ஆட்சி மலரும் என்று உரையாற்றினார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி , எம் ஆர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், அமைப்புச் செயலாளர் மருதராஜ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி பி பி பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குப்புசாமி , பிரேம் குமார், தென்னம்பட்டி பழனிச்சாமி, வேணுகோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed