• Fri. Dec 13th, 2024

திண்டுக்கல்லில் திமுக பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களால் விரட்டி அடிப்பு!

Byp Kumar

Aug 9, 2022

திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் விடாமல் தனியார் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த திமுக பஞ்சாயத்து தலைவரை விரட்டிய பொது மக்கள்.

திண்டுக்கல்லை அடுத்துள்ளது பள்ளபட்டி பஞ்சாயத்து . இந்த பள்ளபட்டி பஞ்சாயத்தில் திமுகவை சேர்ந்த பரமன் தலைவராக உள்ளார். இந்நிலையில் பள்ளபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தோமையார்புரம் ,ஏ டி.காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட நாட்களாக முறையாக குடிநீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் தி மு க தலைவரிடம் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மேலும் குடிநீர் இணைப்புக்கு ரூ.3500 வீதம் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பணம் செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இன்று (08.08.2022) ஏ.டி.காலனி பகுதி வழியாக தோமையார்புரம் அருகே உள்ள தனியார் கம்பெனிக்கு தண்ணீர் கொடுப்பதற்காக புதிதாக பைப் லைன் அமைக்கும் பணி திமுக தலைவர் பரமன் மேற்பார்வையில் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் தலைவரிடம் வாக்குவாதம் நடத்தி பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி திமுக தலைவர் வரமனை விரட்டி அடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இதனால் பைப் லைன் அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு, குழி தோண்டிய இடத்தை மீண்டும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மூடிவிட்டு சென்றனர். இதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு நிலவியதை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.