• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் சீனிவாசன் அறிமுக கூட்டம்..,

ByS.Ariyanayagam

Apr 5, 2026

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ஏசி சண்முகம் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக உள்ள சீனிவாசன் அவர்கள் இதே மேடையில் தான் லஞ்சம் வாங்கி இருந்தாலும் கொள்ளையடித்து இருந்தாலோ அல்லது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருந்தால் எனக்கு வாக்களிக்க வேண்டாம் நான் நேர்மையானவன் என்று தெரிந்தால் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்

எந்த ஒரு அரசியல்வாதியும் தான் போட்டியிடும் தொகுதியில் இதுபோன்று வாக்கு சேகரிக்கும் பொழுது பேச மாட்டார்கள் அப்படி பேசுகிறார் என்றால் மக்களிடம் எவ்வளவு நேர்மையாக நடந்து இருப்பார் என்று கூறினார்

ஏசி சண்முகம் பேசிக் கொண்டிருந்தபோது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன் கண் கலங்கினார்.