• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்- பொதுமக்கள் குற்றச்சாட்டு

ByJeisriRam

Jan 30, 2025

பொதுமக்களுக்கு இடையிலாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் விதிமுறைகளை மீறி, சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படும் வகையில் சாலை ஓரங்களில் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள் வைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த 11.1.2022 ஆண்டு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஏராளமான இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் வீட்டில் வைத்த காதணி விழாவிற்கு ஏராளமான இடத்தில் சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தார்.

இதேபோல் தற்பொழுது பேரூராட்சி மன்ற தலைவர் பிறந்தநாள் விழாவிற்கு ஏராளமான இடங்களில் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் வகையில் சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர்கள் என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

எனவே பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ள பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.