• Mon. Jan 20th, 2025

வீட்டில் பதுங்கி இருந்த பாம்பு வனத்துறை மீட்பு

வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை வனத்துறையினர் பாம்புபிடி ஊழியர் உதவியால் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கரிய மலை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாத்திரங்கள் மேல் ஏதோ ஊர்ந்து செல்வதை போல் கண்டுள்ளார் அருகே சென்ற பார்த்த பொழுது 5 அடி கொண்ட கட்டுவிரியன் பாம்பு எனத் தெரிந்தது.உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.. விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ,பாம்பு பிடி ஊழியர் விக்னேஷ் பதுங்கி இருந்த பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர், அப்பகுதியில் பாம்பை கண்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது