நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2012ல் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது முதல் படமே தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவர் நடித்து முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தார்.
பிறகு மீண்டும் அவருக்கு தமிழ் சினிமாவில், தளபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரது நடிப்பில் கடந்த மாதம் பீஸ்ட் வெளியாகி தோல்வியடைந்தது. அதற்கு முன்பு மார்ச் மாதத்தில் பிரபாஸுடன் நடித்திருந்த ராதே ஷ்யாம் திரைப்படமும் பயங்கர நஷ்டத்தைக் கொடுத்தது.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிய இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது. மேலும் பூஜா ஹெக்டே சிரஞ்சீவியின் ஆச்சாரியா திரைப் படத்திலும் நடித்திருந்தார். அந்த படமாவது வெற்றி பாதையில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவும் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து மூன்று தோல்வி படங்களை கொடுத்ததால் பூஜாவின் மார்க்கெட் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.