கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோ மட்டுமின்றி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது வில்லன் கேரக்டருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி ஒரு புதிய வெப்சீரிஸ் நடித்திருக்கிறார். இதனை இயக்குனர் ராஜ் மற்றும் டீகே இயக்கியுள்ளனர். இந்த வெப்சீரிஸ் இல் ஷாகித் கபூர் ஹீரோவாகவும், ராஷி கண்ணா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.
விஜய் சேதுபதி இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த சீரீஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதன் படப்பிடிப்பு துவங்கப் பட்ட நிலையில் தற்போது மற்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சீரிஸில் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. என்று இந்த வெப்சீரிஸ்க்கு “ஃபர்சி” என்று பெயரிடப்பட்டுள்ளது.