தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தருமபுரி நகராட்சி குட்பட்ட 15,29,30 வார்டுகளில்பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் இளநீர், தர்பூசணி பழம்,மோர்மற்றும் மாம்பழச்சாறு,ஆகியவை கொண்ட தண்ணீர்பந்தலை மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்து வழங்கினார்.
தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல்கள் அமைத்து அவர்களது தாகத்தை தீர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்
அதனடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் ஆணைக் இணங்க தருமபுரி கிழக்கு மாவட்டதிமுக சார்பில் நகராட்சி குட்பட்ட 29,30வது வார்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை அருகே பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குடி நீர், மோர், இளநீர் தர்பூசணிபழங்கள், மற்றும் மாம்பழசாறு அடங்கிய தண்ணீர் பந்தலை நகர பொறுப்பாளர் அன்பழகன் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானருமான தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். அதேபோல் 15வார்டிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.சேகர்.,மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி வார்டு செயலாளர் தங்கமணி.நகரமன்ற உறுப்பினர் சொளந்தர்ராஜன் ரஹீம், வெல்டிங் ராஜா,அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.