• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தர்மம் வென்றது… உற்சாக கூச்சலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…

Byகாயத்ரி

Aug 17, 2022

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது என்றும் அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினரிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் தர்மம் வென்றது… நீதி வென்றது இனிமேல் எல்லாமே எங்களுக்கு தான் வெற்றி என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ராஜ துரோகிக்கும், ராஜ விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளிகாட்டி உள்ளது என்றும் ஓபிஎஸ் ராஜ விசுவாசி என்றும் எடப்பாடி பழனிச்சாமி ராஜ துரோகி என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.