
இபிஎஸ் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும்,இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேச்சு
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை இனி அடுத்த ஆண்டுதான் கூட்டமுடியும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஓபிஎஸ் என்றும் எடப்பாடியின் சதிகாரச் செயல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறையே பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்று அதிமுக விதி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
