


கோவை மருதமலை கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிந்த நிலையில் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதுபோல நேற்று 200 க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கோயில் கல்யாண மண்டபத்தில் பச்சை உடை அணிந்து வள்ளி – கும்மி ஆட்டம் ஆடினர். இதனைக் பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏழாம் படை வீடு முருக பக்தர்களால் அழைக்கப்படும் மருதமலை கோவில் இங்கே தமிழக மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்வர். இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக மருதமலை கோவிலில் மகா கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் கோவை மாவட்டத்தின் முக்கிய திருக்கோயிலாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் மருதமலை திருக்கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன் அடிப்படையில் 48 நாட்களுக்கு மண்டல பூஜை மருதமலை கோவிலில் நடைபெற்று வருகிறது. அதனால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மருதமலை கோவிலில் உள்ள கல்யாண மண்டப முன்பாக 200 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பச்சை உடை அணிந்து குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஒன்றாக வள்ளி – கும்மி ஆட்டம் ஆடியது அங்கு இருந்த பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.


