• Tue. Feb 18th, 2025

திண்டுக்கல்லில் சேதமடைந்துள்ள அரசின் காலனி வீடுகளை பராமரிக்கக் கோரி.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

Byமதி

Dec 7, 2021

சிதிலமடைந்து கிடக்கும் அரசு கட்டிக்கொடுத்த காலனி வீடுகளை மராமத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தமிழக அரசின் சார்பாக தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த கட்டிடங்கள் மிகவும் ஆபத்தாக இடிந்துவிழும் நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இந்த வீடுகளை பராமரிப்பதற்காக தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 15,000 ஒதுக்கினார.; அதேபோல தற்போதும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சரத்குமார் தலைமை வகித்தார் பிகே கருப்புசாமி அஜாய் கோஷ் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.