• Sat. Apr 27th, 2024

அ.தி.மு.க.வுக்கு உரிமையாளர் பா.ஜ.க மட்டுமே.., காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டுவிட்..!

Byவிஷா

Dec 7, 2021

அதிமுகவுக்கு இரண்டு தலைமைகள் இருந்தாலும் உரிமையாளர் ஒருவர் தான் என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் என இரண்டு தலைமைகள் இருக்கும் நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன! உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே!


ஜோதிமணியின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது:


என்ன செய்வது நீங்கள் இரண்டு குடும்பத்திற்காக வேலை செய்ய பழகியுள்ளீர்கள் சகோதரி. இரண்டு தலைமைகள் இருக்கின்ற அதிமுகவோ, பாஜக சாமானியர் மக்களின் ஆட்சியோ உங்களுக்கு வித்தியாசமாக தான் இருக்கும், இங்கே உரிமையாளர் மக்கள் மட்டுமே என தெரிவித்துள்ளார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *