
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (09-11.2021)முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க படாமல் கேரளாவிடம் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்த திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரண்மனையில் நடைபெற்றது.
இன்று திமுக அரசை கண்டித்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க படாமல் கேரளாவிடம் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்த, திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்தும், தமிழகத்தின் உரிமையை கேரளாவிடம் விட்டு கொடுத்த ஸ்டாலின் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் முல்லைப் பெரியாறு அணையை சோதனை நடத்தவும், கேரளாவிற்கு துணைபோகும் திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் மகளிர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
