காரைக்குடியில் நடைபெற்ற பள்ளி மாணவியின் பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி சமூக நல கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகு நிலையத்தில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட வழக்கில் அழகு நிலைய பொறுப்பாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரி, இன்று காரைக்குடியில் சமூகநல கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி ராஜீவ் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.