சாத்தூர் மெயின் ரோட்டில் மின்விளக்குகள் அமைக்கக் கோரி, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சந்திரன் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக், மேற்கு வட்டார துணைத்தலைவர் ஒத்தையால் முத்துவேல், நகர துணைத்தலைவர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம், விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் கோரிக்கை மனுவை அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரி இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
சாத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் மாவட்ட பிரதிநிதி வெள்ளைச்சாமி நகர பொதுச் செயலாளர் ரவி நகர செயலாளர் ராஜ்குமார் வட்டார செயலாளர் சத்திரப்பட்டி லட்சுமணன் காங்கிரஸ் மூத்த தலைவர் பாலு நாயக்கர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சங்கர் பாண்டியன் தெற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரங்குடி ஆறுமுகம் நகர மகளிர் அணி தலைவி எலிசா மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.