• Thu. Mar 28th, 2024

தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் எலக்ட்ரிக் பைக்!

இந்தியாவில், மின்சார இரு சக்கர வாகனத்தின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதை உணர்ந்த பல நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளன.இதில் முன்னிலையில் OLA நிறுவனம் இருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்நிறுவனம் தனது விற்பனையை சென்னை மற்றும் பெங்களூருவில் தொடங்கியது. அப்போதில் இருந்தே இந்நிறுவனத்தின் மின்சார வாகனத்தில் மீது தொழில் நுட்ப புகார்கள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும்,பல இடங்களில் மின்சார வாகனங்கள் தீப் பிடித்து எரியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் மின்சார இரு சக்கர வாகனங்களை வாங்க முன்வந்த பலரும் தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மின்சார இரு சக்கர வாகனம் இரண்டாக உடைந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவீன் யூ மேத்தா என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு OLA நிறுவனத்தின் மின்சார இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த வாகனம் வாங்கியதில் இருந்தே தொடர்ந்து தொழில் நுட்ப பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. அப்போது எல்லாம் புகார் தெரிவித்தபோது, அதை சரி செய்து கொடுத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து வாகனத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இவர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தீடிரென வாகனத்தின் முன்பகுதி உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறிந்து OLA நிறுவனத்திற்கு அவர் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து, நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள். வாகனங்களின் தரங்களை பார்ப்பதில்லை. இதனால்தான் இப்படியான சம்பவம் நடக்கிறது. மேலும் நிறுவனங்களுக்கு மக்களின் உயிர் மீது கவலையில்லையா? தங்களின் லாபம் தான் முக்கியமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *