தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த மாதம் 30ஆம் தேதி சனிக்கிழமை தேனி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது தமிழக அரசின் சார்பில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் விழா பேருரை ஆற்றவுள்ளார்.
அதுசமயம் வருவாய் மற்றும் பேரிடர் நலத் துறை ,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நலத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் ,நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளார்கள். தேர்தல் நடைபெற்று முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வரவேற்க திமுக நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள் .