

சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தில் செங்குளம் கண்மாய் உள்ளது . இக்கண்மாய் மூலம் 1500 ஏக்கர் நன்செய் புன்செய், விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. முழுவதும் செம்மண் பரப்பளவு கொண்டிருந்த கண்மாயில் தற்போது போதிய மழை பெய்யவில்லை எதாவது கடந்த ஒரு வருடங்களாக கண்மாயா வறண்டு காணப்படுகிறது.

இதனால் இப்குதியில் விவசாயம்செய்யும் விவசாயிகள் கண்மாய் நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை பயன்படுத்தி செங்குளம் கண்மாய் கரையை உடைத்து இரவு,பகல் நேரங்களில் செம்மண் மற்றும் கிராவல் மண் உள்ளிட்ட கனிமவளங்களை அதிக அளவில் திருடப்பட்டு வருகின்றன.


செங்குளம் கண்மாயில் மண்அரிப்பை தடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட புலி, வேம்பு, புங்கை ,மரங்கள் நடப்பட்டன. மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மரங்களையும் சுற்றி திருடிவிட்டு செல்கின்றனர். கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது ஒரு போக நெல் விளைச்சலை கூட பெற முடியாது நிலையில் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

சிமெண்ட் திருட்டினால் மண்வளமும் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. இக்கண்மாயை நதிக்குடி , ஆத்தூர் , சுப்பிரமணியபுரம் , உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளக்குகிறது. கனிமவளத்திருட்டினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கனிம வளங்களை திருட்டை தடுக்க வருவாய் துறையினர் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொண்டுள்ளாமல் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


