

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் வருட அபிஷேகம் இன்று சிறப்பு யாக பூஜை, கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர் ,பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், திருநீறு, உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையும், தீபாராதனை நடைபெற்றது.


