• Tue. May 30th, 2023

ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை திரும்ப பெறும்படி கோரிக்கை

Byமதி

Nov 20, 2021

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி தற்போது மீண்டும் வீடுக்காவலில் உள்ளார்.

இந்த நிலையில் அவர், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோரியது வரவேற்கதக்கது. ஓட்டுக்காக நாட்டின் பிற மாநிலங்களில் இறங்கி வரும் பா.ஜ., அரசு, ஜம்மு – காஷ்மீர் மக்களை மட்டும் தண்டிக்கிறது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தினால் பா.ஜ., அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *