

இந்தியாவில் கடந்த மாதத்தில் வேகமெடுத்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,586 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது. கடந்த 19-ந்தேதி பாதிப்பு 15,754 ஆகவும், மறுநாள் 13,272, 21-ந்தேதி 11,539, நேற்று 9,531 ஆக இருந்த நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 57 ஆயிரத்து 546 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் மேலும் 48 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,27,416 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 9,680 பேர் நலமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 33 ஆயிரத்து 624 ஆக உயர்ந்தது. தற்போது 96,506 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,142 குறைவு ஆகும்.
