• Sat. Apr 20th, 2024

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு மாத இறுதி வரை காத்திருக்க முடிவு ?..

By

Aug 21, 2021

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 31-ந் தேதி வரை காத்திருக்க தலிபான்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆட்சி அதிகாரத்தை பெறுவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், எப்போது ஆட்சி அமைக்கப்படும் என்பது பற்றி அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை.


இந்தநிலையில், தலிபான்களுடனான பேச்சுவார்த்தை விவரங்களை அறிந்த ஒரு அரசு அதிகாரி நேற்று புதிய தகவலை வெளியிட்டார். அமெரிக்க படைகள், ஆகஸ்டு 31-ந் தேதி முழுமையாக வெளியேறுகின்றன. அதுவரை எதுவும் செய்வதில்லை என்று அமெரிக்காவுடன் உடன்பாடு செய்திருப்பதாக தலிபான் மூத்த தலைவர் அனஸ் ஹக்கானி தெரிவித்துள்ளார்.


ஆகஸ்டு 31-ந் தேதிவரை தலிபான்கள் புதிய அரசு குறித்து எந்த முடிவோ, அறிவிப்போ வெளியிட மாட்டார்கள் என உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *