ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சர்தமிழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறனின் பிறந்த நாள் புத்தாடை வழங்கல்.
ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் தயாநிதி மாறனின் 58 வது பிறந்த நாள் டிச 5 ல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகர்கோவில் அருகே கொட்டாரம் அருகே உள்ள தனியார் மன நல காப்பகத்தில் காலை உணவு மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் விளையாட்டு மேம்பாட்டு அணியின் குமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான பிரபா G ராமகிருஷ்ணன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜென்சன்ரோச், மாணிக்கராஜா, மாநகர நிர்வாகிகள், மால்டன் ஜினின், வக்கீல் இராமதாஸ், சுப்பையா பிள்ளை கொட்டாரம் பேரூராட்சி உறுப்பினர் கணேசன், உட்பட பலர் பங்கேற்றனர். இதில் 104 நபர்களுக்கு காலை உணவும் புத்தாடைகளும் வழங்கினார். குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழுவின் தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.