• Wed. Jan 22nd, 2025

சுவாமி தோப்பு அய்யா வழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளாரின் துணைவியர் ரமணிபாய் மறைவு…

சுவாமி தோப்பு அய்யா வழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளாரின் துணைவியர் ரமணிபாய் மறைவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அய்யா வழி என்னும் புதிய வழிபாட்டு முறையை தோற்றுவித்த, முத்துக்குட்டி சாமி என்னும் வைகுண்டர் வழி வாரிசான, பூஜித குரு பாலபிராஜதிபதி அடிகளாரின் துணைவியர் ரமணிபாய் நேற்று (டிசம்பர்_2) காலையில் மரணம் அடைந்தார்.

ரமணிபாயின் இறுதி சடங்கு இன்று பிற்பகல் 3மணிக்கு நடைபெற்றது. மரணம் அடைந்த ரமணிபாயின் பூத உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்திய தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை அமைச்சருமான, குமரி மாவட்டம் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக சட்டமன்ற தலைவர் அப்பாவு, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன் மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அதிமுக சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் , அவருடன் கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கட்சியினரும், சமூக அமைப்பினரும் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.