• Mon. Jan 20th, 2025

புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தின் கொடியேற்றம்

கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா அலையத்தின் கொடியேற்றம்
நாளை மாலை நடைபெறும்.

குமரி மாவட்டத்தில் உள்ள 47_மீனவ கிராமங்களில். கடலை கடந்து அடுத்து கண்ணில் படுவது. ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும், வானை தொட்டுவிடுமோ! என்று உயர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் ஒவ்வொன்றும் அழகிய கட்டிட வடிவம் பார்ப்போரை ஈர்க்கும் அழகின் அடையாளம்.

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் நீலக் கடல்ஓரத்தில்.110_ஆண்டுகளுக்கு முன் கட்டிய புனித அலங்கார உபகார மாதா கோயிலின் கட்டுமானப் பணி1900 ஆண்டு தொடங்கி 1914யில் முழுமை பெற்று முதல் திருப்பலி நடைபெற்றது.

கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா கோயிலின் அழகிய கட்டிட கலை. குமரி மாவட்டத்தில் எத்தனேயே தேவாலயங்கள் இருந்தாலும். அழகியலில் குமரியில் முதல் இடத்தில் இருப்பது கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா கோயில். அழகிய தோற்றத்தின் உச்சம்.

கன்னியாகுமரி அலங்கார மாதா தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா நாளை தொடங்கி 10(டிசம்பர்04_14) நாட்கள் நடைபெறுகிறது. 9ம் நாள் திருவிழாவில் இரவும்,10_ம் நாள் பகலிலும் நடை பெறும் தேரோட்டம் நிகழ்வில் மதம் கடந்து பல் சமய மக்கள் தேரோட்டத்தில் பங்கேற்பது. பக்தர்களின் வேண்டுதலை “மாதா” நிறைவேற்றியதின் நன்றி காணிக்கையாக தேரில் நல்லமிழகு,உப்பு என இரண்டு பொருட்களை காணிக்கையாக பல் சமய மக்கள் செலுத்துவது பன்னெடும் காலமாக தொடர்கிறது.