• Wed. Apr 24th, 2024

உரிமை இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடும் டி.ராஜேந்தர்

மாநாடு’ சாட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.


இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால் நவம்பர் 24ம் தேதிமாலை படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் சிலம்பரசன், மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.

இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது படத்தின் சாட்டிலைட் உரிமை அதற்கான விலை திட்டமிட்ட அடிப்படை விலையைவிட குறைவாக கேட்கப்படுவதால் பைனான்சியருக்கு கடனை திருப்பிக்கொடுப்பதில் நெருக்கடி ஏற்ப்பட்டது அதனால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டதாக சுரேஷ் காமாட்சி தரப்பில் கூறப்பட்டது. திட்டமிட்டபடி படம் வெளியாக வேண்டும் என்பதில் சிலம்பரசன் உறுதி காட்டியதால் உஷா ராஜேந்தர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி உதவியை நாடினார்அவரது முயற்சியில் பைனான்சியர் உக்கம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வெளியிட்டுக்குத் தேவை 6 கோடி ரூபாய் தொலைக்காட்சி உரிமை 5 கோடி ரூபாய்க்கு கலைஞர் தொலைக்காட்சி வாங்கிகொள்ள தயாராக இருந்ததுடன் அதற்கான காசோலையும் வழங்கிய நிலையில் கூடுதலாக தேவைப்படும் 1 கோடி ரூபாய்க்கு உத்திரவாதம் தேவைப்பட்டது அதற்கான உத்திரவாதத்தை உஷா, ராஜேந்தர் இருவரும் பைனான்சியர் உக்கம் சந்துக்கு வழங்கினார்கள் அதன் பின் படம் அறிவிக்கப்பட அடிப்படையில் வெளியானது தொலைக்காட்சி உரிமையை எட்டு கோடி ரூபாய்க்கு விஜய் தொலைக்காட்சி வாங்கியது இதனால் உக்கம்சந்த்துக்கு உத்திரவாதம் கொடுத்த உஷா, ராஜேந்தர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

மாநாடு படம் அதன் எதிர்பார்ப்புக்கு மீறிய வணிகரீதியான வசூலை ஈட்டி வருகிறது இந்த நிலையில்
படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது சம்பந்தமாக டி.ராஜேந்தர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது.


படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர்.


இது தொடர்பாக டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் பேரில் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

திரையுலக வியாபார வட்டாரத்தில் விசாரித்தபோது பிரச்சினைகளை முடித்து படத்தை வெளியிட கோபுரம் பிலிஸ்அன்புசெழியன், உஷாராஜேந்தர், ஆகியோர் பணம் கொடுத்ததாக கூறப்பட்டது ஆனால் அப்படி எதுவம்நடக்கவில்லை அனைத்து பிரச்சினைகளையும் சுரேஷ் காமாட்சி எதிர்கொண்டார்.

டி.ராஜேந்தர் குடும்பம் கொடுத்த உத்திரவாதத்தை ரத்து செய்து கொடுத்த பின்னர் அந்த உரிமைக்கு சொந்தம் கொண்டாடுவது தவறானது என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *