• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆவின் பாக்கெட் அளவு குறைவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

Byவிஷா

Oct 10, 2023

ஆவின் நிறுவனமானது பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஊதா நிற பால் பாக்கெட்டில் அளவு குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆவின் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆவினில் வினியோகம் செய்யப்பட்ட ஊதா நிற பால் பாக்கெட்டில் அளவு குறைவாக இருந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். ஆவின் நிர்வாகம் மூலம் பச்சை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிறங்களில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்ட 520 கிராம் எடை கொண்டது என குறிப்பிடப்பட்ட பாக்கெட்டில் 415 கிராம் மட்டும் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பால் வாங்கிய கடைகாரர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுப்பட்டனர். இதற்கு பால் முகவர் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.