• Wed. Jan 22nd, 2025

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு

By

Sep 1, 2021 , , ,

புதுச்சேரியில் செப்.15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு நேற்றுடன்  நிறைவடைந்த நிலையில்  புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இரவு நேர ஊரடங்கு இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.