

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர், ஆவடி வழியாக மீண்டும் கடற்கரையை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் எதிர் திசையில் திருவள்ளுர், அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வழிதடத்தில் 2 புறநகர் மின்சார ரயில்களின் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

