கடைசி காலத்தை செலவிட ஏற்ற இடம் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி காசிக்கு சென்றிருப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் விமர்சனம் செய்திருக்கிறார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்புவிழாவில் பங்கேற்றார்.
பின்னர், அவர் கங்கை ஆற்றில் நீராடி வழிபட்டார். இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிடம், மோடியின் காசி பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அகிலேஷ், பொதுவாக கடைசி காலத்தை காசியில் செலவிடதான் அனைவரும் விரும்புவார்கள். அவர்களுக்கு பொருத்தனமான இடம் அது தான் என்று கிண்டலாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி, உங்களிடமும் என்னிடமும் பொய் கூறலாம். ஆனால், கடவுளிடம் கூற முடியாது என்றும் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார். பிரதமர் மோடியும், அவரது ஆதரவாளர்களும் காசியில் ஒரு மாதம் மட்டுமல்ல, இரண்டு, மூன்று மாதங்கள் கூட தங்கலாம் என்ற அகிலேஷ், அவர்களுக்கு தங்குவதற்கு ஏற்ற இடம் காசி தான் என்றார். பிரதமர் மோடியின் காசி பயணம் குறித்து அகிலேஷின் விமர்சனத்திற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் வருகின்றனர்.