பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பதிலிருந்து சிபிஎம் பின்வாங்காது என்று மார்க்சிஸ்ட் கேரள மாநிலக் குழு தெரிவித்து உள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்தியில் காங்கிரஸுடனான கூட்டணியில் கட்சிக்கு தெளிவு தேவை என்று சிபிஎம் மாநிலக் குழு தெரிவித்தது. ஏப்ரல் 23-வது கட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும் வரைவு அரசியல் தீர்மானம், சிபிஎம் காங்கிரஸுடன் இணையக்கூடாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. எனினும் பிளவுபடாத பாஜக எதிர்ப்பு முன்னணி இருப்பதை கட்சி உறுதிசெய்ய வேண்டும். இது முரண்பாடான ஒன்று என மாநிலக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி பின்வாங்கக் கூடாது எனவும் கேரள பிரிவு கருத்து தெரிவித்துள்ளது. மாநிலக் குழு உறுப்பினர்கள் பொதுவாக வரைவு அரசியல் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதாக அந்த கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலமும் அரசியல் சூழ்நிலையை மதிப்பீடு செய்து பிராந்திய கட்சிகளுடன் புரிந்து உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த வரைவுத் தீர்மானத்தில் திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக மாநிலக்குழுக் கூட்டம் கூடியது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் மத்திய குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை கண் இமைபோல பாதுகாக்கிறது- ஜெயபிரதீப் அறிக்கைகண் இமைபோல எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை பாதுகாப்பதாக ஓபிஎஸ் மூத்த மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்பொதுக்குழுவுக்கு […]
- குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவருடன் சந்திப்பு மனநிறைவாக இருந்தது-ஸ்டாலின்இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவராக ஜெதீப் தன்கர் […]
- பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து நிதின் கட்காரி நீக்கம்பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நீக்கப்பட்டுள்ளார்.பாரதியஜனதா கட்சியின் உயர்நிலை கொள்கை வகுக்கும் அமைப்பான […]
- ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மிக எழுச்சியோடு செயல்படும் – கோபாலகிருஷ்ணன் எம்பி பேட்டிஅதிமுக ஓபிஎஸ் தலைமையில் மிக எழுச்சியோடு செயல்படும் என முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் பேட்டி.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கின் […]
- மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள்மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம். பல்வேறு மாநிலங்களில் […]
- மதுரையை காப்பாற்ற வேண்டும் -சு.வெங்கடேசன் எம்.பிமதுரையை காலநிலை மாற்றத்தின் ஆபாயத்திலிருந்து காப்பற்றவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி பேச்சுமதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிகழ்ச்சி […]
- திருப்பரங்குன்றத்தில் ஆவணிமாதபிறப்பை முன்னிட்டு அஸ்ரத் தேவருக்கு சிறப்பு பூஜைதிருப்பரங்குன்றத்தில் ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதல் […]
- கட்சியை அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது -ஓபிஎஸ்அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா […]
- ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்- ஜெயக்குமார்…பொதுக்குழு செல்லாது என ஜகோர்ட் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என முன்னாள் அமைச்சர் […]
- ஜெ.நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஓபிஎஸ்…பொதுகுழு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெ.நினைவிடம் சென்ற ஓபிஎஸ் கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தினார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் […]
- தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவின் தலைமை குறித்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் […]
- உயர்நீதிமன்ற தீர்ப்பு. ஆண்டிபட்டியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்…அதிமுகவில் நிலவிய பிரச்சனையில் உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதில் அதிமுகவில் ஜூன் 23ஆம் […]
- ஜவான் படத்தில் விஜய்சேதுபதி.. அவரே உறுதி செய்துள்ளார்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களையும் […]
- இபிஎஸ் சதி முறியடிப்பு- இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழுஇபிஎஸ் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும்,இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை […]
- தர்மம் வென்றது… உற்சாக கூச்சலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை […]