• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அழகு கலை நிபுணர்கள் சங்கம் துவக்க விழா

Byதரணி

Sep 26, 2022

தேனி என்.ஆர்.டி நகர் மாவட்ட அழகுகலை நிபுணர்கள் சங்க துவக்கவிழா இன்று காலை நடைபெற்றது. குட்வெல்கேர் அண்ட் புயூட்டி அசோசியேசன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ஹோட்டல் வெஸ்டர்ன் காட்ஸில் சங்க துவக்கவிழா, நிர்வாகிகள் அறிமுகவிழா, பயிற்சி வகுப்பு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா, தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் செல்வகுமார் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு தேசிய அழகுகலை நிபுணர்கள் சங்க தேனி மாவட்ட தலைவர் சித்ரா குமரேசன் தலைமை தாங்கினார். ,அழகுகலை நிபுணர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மாலதிகுமணன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் துவக்க விழாவை முன்னிட்டு ஒருநாள் இலவச அழகு கலை பயிற்சி, மாவட்ட வணிகர் சங்க பேரவை கூட்டமைப்பு சங்கத்துடன் இணைந்து நடைபெற்றது. தேனி மாவட்ட நிர்வாகிகள் சில்பா, பிரயாலட்சுமி, பொருளாளர் சாரதா, துணைச் செயலாளர்கள் சசிகலா, கற்பகவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.