• Fri. Nov 13th, 2026

குழந்தைகள் தின விழா..,

ByKalamegam Viswanathan

Nov 13, 2026

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

வட்டாரவள மேற்பார்வையாளர் (பொறுப்பு) மஞ்சுளா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஷர்மிளா பானு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் சாந்தி கலந்து கொண்டார்.

ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். விழாவில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு முதலமைச்சரின் வாழ்த்து அட்டை மற்றும் கேக்கினை வட்டாரக் கல்வி அலுவலர் சாந்தி வழங்கினார். விழாவில் குழந்தைகளுடைய பாட்டு, கவிதை, நடனம், பேச்சு மாறுவேடம், நகைச்சுவைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆசிரியர் ஷகிலாமாய் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் மாலா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மெர்சி, ராஜேஸ்வரி, ஷோபனா மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.