தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் இனி வரும் வாரங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாவர்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா குறைவு காரணமாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் மக்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தாமதமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.