• Thu. Feb 13th, 2025

இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் இப்படியா?.. அச்சத்தில் மத்திய அரசு!

By

Aug 28, 2021

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அடுக்கு தடுப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் அதிவேகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 32,801 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 24 மணி நேரத்தில் 1,70,703 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 1,801 மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 18,503 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 198 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு 2 வாரங்களாக தளர்த்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அடுக்கு தடுப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று கண்காணித்தல், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், முழு வீச்சில் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.