• Tue. Apr 23rd, 2024

தங்கம் வெல்வேன் – நம்பிக்கையூட்டும் பவினா

வாழ்க்கையில் சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள பவினா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பவீனா பட்டேல், ஜாய்ஸ் டி ஒலிவியராவை வென்றதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11-5, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவீனா பென் பட்டேல் 3-2 என்ற செட் கணக்கில் இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

சீன வீராங்கனை 11-7 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்த நிலையில், அடுத்தடுத்த செட்களை திறம்பட விளையாடி பவீனா இறுதி போட்டிக்கு சென்றுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என்று நிரூபித்து உள்ளேன்” என்றார். நான் இறுதி போட்டிக்கு செல்வேன் என்று நினைத்தது இல்லை. 100 சதவீதம் விளையாடினேன். இறுதி போட்டிக்கு மனதளவில் தயாராக உள்ளேன். இதுபோன்று தொடர்ந்து விளையாடினால், நிச்சயம் தங்க பதக்கம் வெல்வேன்” எனவும் பவினா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *