சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவி மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் மீண்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 163- ஆக
பதிவாகியிருந்த நிலையில், இன்று பாதிப்பு 201-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3,397- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 0.15 ஆகவும் வாராந்திர பாதிப்பு 0.14 சதவிகிதமாகவும் உள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 315- பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 879- ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 220.04 கோடியாக அதிகரித்துள்ளது.