• Fri. Apr 26th, 2024

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக காஷ்மீரில் ஏற்கனவே பல இடங்களில் சோதனை நடத்தியது. இது தொடர்பான வழக்கும் பதிவாகி இருக்கிறது.
இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வது தொடர்பான வழக்கில் காஷ்மீர், டெல்லியில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், குல்காம், பெக்ரம் போரா, சோபரே, அவந்தி போரா, ஜம்மு ஆகிய பகுதியிலும் டெல்லியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அனந்த் நாக்கில் உள்ள ஹதிகம் கிராமத்தில் அரசு ஆசிரியர் இக்பால் ஷேக் மற்றும் டெய்லர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. புல்வாமாவில் உள்ள ராஜ்போரா கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் அஹ்சன் மிரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *