• Tue. Sep 10th, 2024

வடகொரியாவிலும் நுழைந்துவிட்டது கொரோனா

ByA.Tamilselvan

May 12, 2022

கொரோனாதொற்று பிடியிலிருந்து உலகம் மீண்டும் வரும் நிலையில் இதுவரை தொற்று ஏற்படாத வடகொரியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று 3 ஆண்டுகளாக நீடித்துவருகிறது. கொரோனா தொற்று உலக முழுவதும் தடுப்பூசி மூலமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.சொல்லபோனால் உலகம் மெல்லமெல்ல தொற்றின் பிடியிலிருந்து மீண்டுவருகிறது.எனலாம்.இதுவரை வடகொரியா அரசு தனது நாட்டில் கொரோனா தொற்று இல்லை என மறுத்து வந்தது.
இந்நிலையில் தற்போது அந்நாட்டில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது:-
தீவிரமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது. நமது தேசத்தில் ஒமைக்ரான் வைரஸ் சத்தமில்லாமல் நுழைந்துவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தேசிய அவசர நிலை அறிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்படுகிறது.மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.இவ்வாறு வடகொரிய அதிபர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *