• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொரோனா இழப்பீடு: இணையதள முகவரி வெளியீடு..!

Byமதி

Dec 8, 2021

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவி எளிமையாக பெற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், 

“தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/ (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாண வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://tn.gov.in என்னும் இணையதளத்தில் “வாட்ஸ் நியூ“ பகுதியில் “Ex-Gratia for Covid-19” எஎன்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகைபெறலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி தமிழக அரசு முன்னரே கொரோனா தொற்றினால் மரணமடைந்த முன்கள பணியாளர்களுக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சமும், இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.