தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொம்புக்காரன்புலியூர் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கடமலைக்குண்டு சார்பதிவாளர் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து நேற்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் ஆண்டிபட்டி தி.மு.க எம்.எல்.ஏ மகாராஜன் ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய கட்டிடத்தை பார்வையிட்டனர். மேலும் அலுவலகத்திற்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மதுரை சரக உதவி பதிவுத்துறை தலைவர் ரமேஷ், மாவட்ட பதிவாளர் செல்விஇயல்அரசி, மாவட்ட பதிவாளர் தணிக்கை திருஞானம், கடமலைக்குண்டு சார்பதிவாளர் மணிகண்டன், கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, மற்றும் ஆவண எழுத்தாளர் வசந்த நாராயணன், ஆண்டிபட்டி வட்டாட்சியர் திருமுருகன்,ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, பிரபாகரன், உமாமகேஸ்வரி வேல்முருகன், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் முருகன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கடமலைக்குண்டு அருகே புதிய சமத்துவபுரம் கட்டப்பட உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை துரிதப்படுத்தி விரைவில் சமத்துவபுரம் கட்டும் முதற்கட்டப் பணிகளை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வை தொடர்ந்து வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது பணிகளை விரைந்து முடிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டார்.