• Fri. Dec 13th, 2024

மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு

ByA.Tamilselvan

Jul 19, 2022

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கொரோனா தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தொற்றால் பாதிப்படுகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர், ஓபிஎஸ் என்று அரசியல் தலைவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதே போல் வரலட்சுமி சரத்குமார் போன்ற பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் பிரபல இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் நள்ளிரவு கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு மணிரத்னம் வந்தார்.
அவருக்கு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவர் பரிந்துரைப்படி கண்காணிப்பில் இருந்து வருகிறார்.