• Tue. Dec 10th, 2024

குன்னூர் மலை ரயில் சேவை ரத்து

Byவிஷா

Nov 4, 2024

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பெய்து வரும் கனமழையால் மலைப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள மாவட்டங்களில் அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு வருவதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குன்னூர் மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை வரை மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில்சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சற்று கவலை அடைந்துள்ளனர்.