ஊட்டி மலை ரயில் பாதை மழையால் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, தற்போது அது சீரமைக்கப்பட்டுள்ளதால், நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன, ரயில் பாதையில் கற்பாறைகள் விழுந்தன. தண்டவாளத்தின் குறுக்கே மரங்கள் விழுந்து ரயில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் உதகமண்டலம் மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது, மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் நாளை முதல் இயக்கப்படுகிறது.
ஆம், சீரமைப்பு பணிகள் முடிந்ததால், நாளை (நவ.08) முதல் வழக்கம்போல் மலை ரயில் சேவை தொடங்கும் என சேலம் ரயில்வே கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.